ஆண்டிப்பட்டி அருகே மளிகைகடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை

ஆண்டிப்பட்டி அருகே மளிகைகடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 43). மளிகைகடை நடத்தி வந்தார். இவருக்கு அப்பகுதியில் பூர்வீக சொத்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஜன் பூர்வீக சொத்தை பிரித்து தருமாறு தனது சகோதரர்களிடம் கேட்டார். அப்போது சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய மகன்கள் சேர்ந்து மகாராஜனை தாக்கினர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் சமரசமாக போவதாக கூறியதை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பூர்வீக சொத்தை திருப்பி தராததால் மனவேதனையில் இருந்த மகாராஜன் நேற்று முன்தினம் அங்குள்ள நல்லதங்காள் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மகாராஜன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story