மாவட்ட செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Farmers union protests against construction of dam in Meghadau

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள யார்கோல் அணையை இடித்து அகற்ற வேண்டும், 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் தொடர்பான மனுவை அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.