மூங்கில்துறைப்பட்டில் பிரதான குழாய் உடைந்து வீணாக வழிந்தோடும் குடிநீர்


மூங்கில்துறைப்பட்டில்  பிரதான குழாய் உடைந்து வீணாக வழிந்தோடும் குடிநீர்
x
தினத்தந்தி 26 July 2021 5:21 PM GMT (Updated: 26 July 2021 5:21 PM GMT)

மூங்கில்துறைப்பட்டில் பிரதான குழாய் உடைந்து வீணாக வழிந்தோடும் குடிநீர்

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு அங்குள்ள ஏரிக்கரை கிணற்றில் இருந்து தண்ணீரை பிரதான குழாய் மூலம் மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கு எடுத்து வரப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அண்ணாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையில் வழிந்தோடும் குடிநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் தேங்கி நிற்கும் தண்ணீரில் இறங்கி செல்லும்போது நடந்து செல்லும் பாதசாரிகள் மீது தண்ணீரை வாரி இறைத்து விட்டு செல்கின்றன.  குழாய் உடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story