கீழ்வேளூர் அருகே 210 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தவர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

கீழ்வேளூர் அருகே 210 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கல்,
கீழ்வேளூர் அருகே மேலகாவலக்குடி பகுதியில் நேற்று தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இந்த பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் சோதனை செய்த போது அங்கு 6 பிளாஸ்டிக் கேன்களில் 210 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 210 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த ஆந்தகுடி, அறுபதாம் கட்டளை சேர்ந்த பழனிவேல். (வயது58) என்பவரை பிடித்து கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பழனிவேலுவை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலகாவலக்குடியை சேர்ந்த தவமணி மகன் சார்லசை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story