ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா

பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வசிக்கிற தெருவுக்கு சீல் வைக்கப்பட்டது.
பழனி:
பழனி பெரியகடைவீதி சுந்தரேசன்பிள்ளை சந்து பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் நேற்று சம்பந்தப்பட்ட தெருவுக்கு சென்று, வெளியாட்கள் நுழையாதபடி தகர சீட்டால் மூடி ‘சீல்' வைத்தனர். மேலும் அந்த தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அங்கு வசிப்பவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தினர் கோவை சென்று வந்ததாகவும், அதன்பிறகு அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. பழனியில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story