தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்


தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 27 July 2021 5:11 PM GMT (Updated: 27 July 2021 5:11 PM GMT)

உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

உடுமலை
உடுமலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் குவிந்தனர். 
கொரோனா தடுப்பூசி
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக பொதுமக்கள் குடியிருக்கும்பகுதிகளில் அந்தந்த பகுதிகளைச்சேர்தவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளில் (பள்ளிகள்) கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று உடுமலை நகராட்சி பகுதியில் ராமசாமி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் மொத்தம் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஏரிப்பாளையத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் மொத்தம் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோன்று சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300 பேருக்கும், குறிஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200பேருக்கும், சின்னபூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 210 பேருக்கும், பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
பொதுமக்கள் கூட்டம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதுயது. .பொதுமக்கள், முகாம் நடக்கும் பள்ளிகளுக்கு அதிகாலையிலேயே வந்து வருவாய் துறை மற்றும் நகராட்சிசுகாதார துறை ஊழியர்கள் வரும்வரைகாத்திருக்கின்றனர்.அவர்கள் வந்ததும் டோக்கன் வழங்கப்படுகிறது.டோக்கன் வாங்கியவர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் வந்ததும் நீண்ட வரிசையில் நின்று சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Next Story