சின்னசேலம் அருகே பரிதாபம் அரசு பஸ் கார் மோதல் ஆடிட்டர் உள்பட 2 பேர் பலி

சின்னசேலம் அருகே பரிதாபம் அரசு பஸ் கார் மோதல் ஆடிட்டர் உள்பட 2 பேர் பலி
சின்னசேலம்
சேலம் வெங்கட்ராவ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் மகன் ஆஷிக் (வயது 27). ஆடிட்டரான இவர் சென்னையில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்ததார்.
இந்த நிலையில் ஆஷிக் நேற்று காலை சென்னையில் இருந்து வாடகை காரில் சேலத்துக்கு புறப்பட்டார். காரை சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் முருகன்(28) ஓட்டினார்.
மதியம் 12 மணியளவில் சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னசேலம் அடுத்த வானவகொட்டாய் பிரிவு சாலை ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரே சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஆஷிக், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story