தபால்துறை வாகனம் மோதி முதியவர் பலி


தபால்துறை வாகனம் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 27 July 2021 11:48 PM IST (Updated: 27 July 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

தபால்துறை வாகனம் மோதி முதியவர் பலி

காளையார்கோவில்
காரைக்குடியிலிருந்து தபால் துறையின் சரக்கு வாகனம் ஒன்று நேற்று காலை தபால் பைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. கொல்லங்குடி அருகே வளைவில் வேகமாக திரும்பியபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த வீரமுத்துபட்டியை சேர்ந்த சுப்பையா(வயது 60) சம்பவ இடத்திலேயே பலியானார். அதே வாகனத்தில் வந்த கொல்லங்குடி முத்தையா படுகாயமடைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தபால்துறை சரக்கு வாகனத்தில் வந்த இருவரும் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story