கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

கடையம் அருகே கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
கடையம்:
கடையம் அருகே அங்கப்பபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தெற்குமடத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை தங்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் வந்து முற்றுகையிட்டார்.
அப்போது அவர் தங்கள் நிலத்தை பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மற்றொருவர் பட்டா பெற்று பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறினார். அப்போது அவர்களிடம் உங்கள் பெயரில் ஆவணங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கிராம நிர்வாக அலுவலர் அமுதா தெரிவித்தார்.
மேலும் தகவலறிந்து வந்த கடையம் காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார், அவர்களிடம் உரிய ஆவணங்கள் மூலம் பட்டாவிற்கு விண்ணப்பித்து பட்டா பெற்று கொள்ளுங்கள். பத்திரப்பதிவு செய்தது குறித்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள், என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story