மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மணல்மேடு,
எலந்தங்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31) இவர் கொள்ளிடத்தில் குளிக்க சென்ற போது கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாலமுருகன் மணல்மேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பட்டவர்த்தி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் சீர்காழி வேட்டங்குடி மெயின் ரோட்டை சேர்ந்த கருணாநிதி மகன் கார்கில் (19) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்கிலை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story