வாலிபரின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு கறம்பக்குடி வந்தது


வாலிபரின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு கறம்பக்குடி வந்தது
x
தினத்தந்தி 30 July 2021 10:50 PM IST (Updated: 30 July 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் உடல் ஒரு மாதத்திற்கு பிறகு கறம்பக்குடி வந்தது

கறம்பக்குடி, ஜூலை.31-
கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்த அவர் குடும்ப வறுமை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சவூதிஅரேபியா சென்றார். அங்கு வேலை பார்த்த அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை விபத்தில் இறந்ததாக அவரது நண்பர்கள் ராஜேசின் மனைவி உமாமகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜேசின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள தமிழர் நலசங்க தமாம் மண்டல தமிழ் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் சையது இப்ராஹீம் மற்றும் நிர்வாகிகள் அவர்களது சொந்த முயற்சியால் இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு ராஜேசின் உடலை சொந்த ஊர் அனுப்பிவைத்தனர். இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின் ராஜேஷ் உடல் நேற்று கறம்பக்குடி வந்தது. அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ராஜேசின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர பெரும் உதவி செய்த சவுதி அரேபியா தமாம் மண்டல தமிழ் அமைப்பினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Next Story