அரசு கல்லூரியில் ஆன்லைன் மூலம் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை

அரசு கல்லூரியில் ஆன்லைன் மூலம் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.org மற்றும் www.tngasa.in ஆகிய இணையதள முகவரிகளின் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் உள்ள 14 இளநிலை பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல், உயிர்த்தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், பி.சி.ஏ. (கணினி பயன்பாட்டியல்), பி.ஏ.ஆங்கிலம், வரலாறு, பி.லிட் தமிழ், பி.ஏ. டி.டி.எம். (சுற்றுலா பயண மேலாண்மையியல்) பி.எஸ்.டபுல்யூ. (சமூகப்பணி), பி.காம் (வணிகவியல்), பி.பி.ஏ. (மேலாண்மையியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் வருகிற 10-ந்தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான சேவை மையம் இயங்கி வருகின்றது. அதன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) சிவநேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story