மாவட்ட செய்திகள்

இல்லாத ஒன்றை இருப்பதாக ஊதி பெரிதாக்கி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல + "||" + It is not fair for the opposition to exaggerate the existence of something that does not exist and cause a stir in parliament

இல்லாத ஒன்றை இருப்பதாக ஊதி பெரிதாக்கி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல

இல்லாத ஒன்றை இருப்பதாக ஊதி பெரிதாக்கி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல
இல்லாத ஒன்றை இருப்பதாக ஊதி பெரிதாக்கி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல நாராயணன் திருப்பதி அறிக்கை.
சென்னை,

தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று பரவலாக பேசப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் முக்கியத்துவம் உள்ள 2 மசோதாக்கள் நிறைவேறி உள்ளன.


அதாவது இன்றைய கால கட்டத்திற்கு மிக அவசியமான, ‘காரணி ஒழுங்குமுறை திருத்த மசோதா', ‘தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொழில் முறை மேலாண்மை மசோதா' என்ற 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல், நடக்காத ஒன்றை நடந்ததாகவும், இல்லாத ஒன்றை இருப்பதாகவும் ஊதி பெரிதாக்கி, நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கவலைப்படாமல், மக்கள் நலன் குறித்த சிந்தனையில்லாமல் பாராளுமன்றத்தில் அமளி ஏற்படுத்திக்கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல. ஆனாலும், பொறுப்புள்ள கட்சியாக பா.ஜ.க. நாட்டு மக்களின் நலன் குறித்த பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டு செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பொய்களை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம்; தமிழக பா.ஜ.க. தலைவர் அறிக்கை
பொய்களை நம்பி விலைமதிப்பற்ற உயிரை இழக்க வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
2. திருப்பதியில் சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் - தேவஸ்தானம் தகவல்
திருப்பதி ஏழுமலையானை வழிபட சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டோக்கன் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 100 கனிம சுரங்கங்களின் அறிக்கை - மத்திய அரசிடம் இன்று ஒப்படைப்பு
ஏலத்துக்காக 100 கனிம சுரங்கங்களின் அறிக்கையை மத்திய அரசிடம் இந்திய புவியியல் ஆய்வு மையம் இன்று ஒப்படைக்கிறது.
4. திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் 24 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
5. திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம்
திராவிட களஞ்சியம் புத்தகம் தொடர்பாக தேவையற்ற குழப்பங்களை உருவாக்க முயல வேண்டாம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.