மடத்துக்குளத்தையடுத்த ருத்ராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை


மடத்துக்குளத்தையடுத்த ருத்ராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2021 9:35 PM IST (Updated: 1 Aug 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளத்தையடுத்த ருத்ராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை

போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த ருத்ராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி நீர்மட்டம்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அமராவதி அணையை அடிப்படையாகக்கொண்டு ஆயக்கட்டு பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. இதனால் நெல் சாகுபடிப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த ருத்ராபாளையம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ராமகுளம் கால்வாய் மற்றும் அமராவதி ஆற்றின் மூலம் இந்த பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொண்டு வருகிறோம்.
இடைத்தரகர்கள்
ஒவ்வொரு ஆண்டும் பருவம் தப்பிய மழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் விளைந்த நெல்லை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமே விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது.அத்துடன் சில வேளைகளில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது.
 எனவே இந்த பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ருத்ராபாளையத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் சுமார் 1360 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தானியங்களை உலர வைப்பதற்கான உலர்களங்கள் போதுமான அளவில் இல்லை.எனவே கூடுதலாக தானிய உலர்களம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.

Next Story