மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

x
தினத்தந்தி 2 Aug 2021 10:26 AM IST (Updated: 2 Aug 2021 10:26 AM IST)


சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 19). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விக்னேஷ் (23) என்பவருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள நீர்விழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire