கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 12:14 AM IST (Updated: 3 Aug 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்
தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே நத்தமேட்டை சேர்ந்தவர் மல்லிகா. இவரது உறவினர் வளர்மதி. இவர்கள் 2 பேரும் நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். 
அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து 2 பேரும் திடீரென மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய்யை பிடிங்கியும், உடலில் தண்ணீரை ஊற்றியும் அவர்களை காப்பாற்றினர். 
பரபரப்பு
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மல்லிகா கொடுத்த மனுவில், எனது நிலத்தில் சோளத்தட்டுகள் மற்றும் கோரை பயிரிட்டு அறுவடை செய்யும் தருவாயில் இருந்தது. இதில் சோளத்தட்டைகளை சிலர் அறுத்துள்ளனர். 
இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் எனது சொத்துக்களை சிலர் அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து மல்லிகா, வளர்மதி ஆகியோரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story