மணப்பாறை மாட்டுச்சந்தையில் குதிரைகள் விற்பனை தொடக்கம் வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள் கூட்டம்


மணப்பாறை மாட்டுச்சந்தையில் குதிரைகள் விற்பனை தொடக்கம் வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2021 8:03 AM IST (Updated: 4 Aug 2021 8:03 AM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தையில் நேற்று முதல் குதிரைகள் விற்பனையும் தொடங்கப்பட்ட நிலையில் விதவிதமான குதிரைகளை வேடிக்கை பார்க்க திரளானோர் கூடினர்.

மணப்பாறை, 
புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தையில் நேற்று முதல் குதிரைகள் விற்பனையும் தொடங்கப்பட்ட நிலையில் விதவிதமான குதிரைகளை வேடிக்கை பார்க்க திரளானோர் கூடினர்.

புகழ்பெற்ற மாட்டுச்சந்தை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மாட்டுச்சந்தை மிகவும் பிரமலமானது. புகழ்பெற்றதாக விளங்கும் இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். 
இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகை முற்றிலுமாக நின்று விட்டது. 

குதிரை விற்பனை ஆரம்பம்

இந்த சந்தையில் ஒரு நாள் மட்டும் சுமார் 5 முதல் 8 கோடி வரை மாடுகள் விற்பனை நடைபெறும். இந்தநிலையில் மணப்பாறை மாட்டுச்சந்தையில் குதிரைகள் விற்பனை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

இதனால் சந்தையின் ஒப்பந்தகாரர் ஏற்பாட்டில் நேற்று மாலை முதல் மாட்டுச்சந்தையின் ஒரு பகுதியில் குதிரை சந்தையும் தொடங்கப்பட்டது.  முதல் நாள் என்றாலும் கூட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாட்டுக் குதிரை, காட்பாடி என பல்வேறு வகையான குதிரைகள் விற்பனைக்கு வந்திருந்தது. சிறிய குட்டி முதல் பெரிய அளவிலான குதிரைகள் வரை விற்பனைக்கு வந்திருந்தது. இதுமட்டுமின்றி குதிரை வண்டி, சவாரி செய்ய குதிரை, குதிரைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

குதிரை சவாரி

இதே போல் குதிரை வைத்திருப்பவர்கள் குதிரையில் அமர்ந்து சந்தையின் சவாரி செய்தது அனைவரின் கவனத்தையும் வெகுவா ஈர்த்தது. இதே போல் குதிரைகளை வேடிக்கை பார்க்க பலரும் திரண்டனர். ஆரம்ப காலங்களில் குதிரை வண்டிகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்ததுடன் பலரும் குதிரையில் சவாரியும் செய்வார்கள். ஆனால் அவையெல்லாம் குறைந்து சுற்றுலாத்தளங்களில் ஆசைக்காக குதிரை சவாரி செல்லும் நிலை உள்ளது.

இருப்பினும் தற்போது விண்ணை முட்டும் பெட்ரேல், டீசல் விலை வாசி உயர்வால் பலரும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வாகனங்களை எடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை முற்றிலுமாக மாறி அனைத்து தேவைகளுக்கு மீண்டும் குதிரையை பயன்படுத்தி முயற்சிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த குதிரை விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக குதிரை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story