கோவிலுக்குள், காலணியுடன் அமர்ந்த பெண் டாக்டரால் பரபரப்பு


கோவிலுக்குள், காலணியுடன் அமர்ந்த பெண் டாக்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2021 11:17 PM IST (Updated: 4 Aug 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்குள், காலணியுடன் அமர்ந்த பெண் டாக்டரால் பரபரப்பு

வேலூர்

வேலூரை அடுத்த பொய்கை பஸ் நிறுத்தம் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அங்கு பெண் டாக்டர் ஒருவர் காலணி அணிந்திருந்தார். இதைப்பார்த்த சிலர் கோவிலுக்குள் காலணி அணிய வேண்டாம். அதை வெளியே கழற்றி விட்டு பணி மேற்கொள்ளுங்கள் என்று கூறினர். எனினும் அந்த டாக்டர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆதிசிவா மற்றும் நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பெண் டாக்டரிடம் காலணியை வெளியே கழற்றிவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதை அந்த டாக்டர் கேட்காமல் தொடர்ந்து காலணியுடன் அமர்ந்திருந்தார். தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தவே அவர் கோவிலுக்கு வெளியே சென்றார். தொடர் அறிவுறுத்தலுக்கு பின்னர் டாக்டர் காலணியை வெளியே கழற்றிவிட்டு பணி மேற்கொண்டார். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story