வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது


வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2021 5:22 PM GMT (Updated: 2021-08-06T22:52:02+05:30)

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் முத்து பாண்டி வயது 52 கட்டிட தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். வேலைக்குச் சென்ற பாண்டித்துரை வேலை குறைவாக இருந்ததால் 11 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ஒரு இளைஞர் பீரோவின் கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். 
இதனை பார்த்த முத்துப்பாண்டி சத்தம் போடவே, உடனே அருகில் இருப்பவர்கள் சுற்றி வளைத்து  திருடனை பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா, மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் திருடனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் அள்ளிநகரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராமர் வயது 20 என்பதும் இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் ராமர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

Next Story