முக்கடல் அணை பகுதியில் 4 நவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

ிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க முக்கடல் அணைப்பகுதியில் வனத்துறை சார்பில் 4 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:
சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க முக்கடல் அணைப்பகுதியில் வனத்துறை சார்பில் 4 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்தார்.
சிறுத்தை புலி நடமாட்டம்
பூதப்பாண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முக்கடல் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்துதான் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்கள், வழியோர கிராமங்கள் போன்றவற்றுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அணைப்பகுதி, அணையின் கீழ் உள்ள பூங்கா பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மாநகராட்சி சார்பில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த அணைப்பகுதிக்கு அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்கின்றன. இது இங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று முக்கடல் அணை பூங்கா பகுதியில் சுற்றித் திரிந்தது. இதுவும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
நவீன கேமராக்கள்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள 4 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கக்கூடியது எனவும், சிறுத்தைப்புலி எந்த வழியாக வருகிறது? எந்த வழியாகச் செல்கிறது? என்பதை கண்காணிக்க இந்த கேமராக்கள் உதவும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று காலை முக்கடல் அணைப்பகுதிக்குச் சென்று சிறுத்தைப்புலி நடமாடிய பகுதிகள், அணைப்பகுதி, பூங்கா பகுதி, வனத்துறையினர் நவீன கேமராக்கள் பொருத்தியுள்ள இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மாநகராட்சி மற்றும் வனத்துறை ஊழியர்களிடமும் விவரங்களையும் கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story