உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கான விழிப்புணர்வு முகாம்


உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 8 Aug 2021 6:21 PM IST (Updated: 8 Aug 2021 6:21 PM IST)
t-max-icont-min-icon

உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது,

அதை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். 

மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், டாக்டர் வைஷ்ணவி, சுகாதார ஆய்வாளர் வஜ்ரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் எப்படி ஊட்டுவதன் அவசியம் குறித்து மருத்துவ 
குழுவினர் எடுத்து கூறினர். இதில் தாய்மார்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.

Next Story