தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்


தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:47 PM IST (Updated: 9 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

தர்மபுரி:
மனித சங்கிலி போராட்டம்
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு, விவசாய சங்கங்களின் போராட்டக்குழு மற்றும் அனைத்து விவசாய தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கிருஷ்ணன், சண்முகராஜா, சின்னசாமி, மோகன், மணி, மாதேஸ்வரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோன்று நல்லம்பள்ளியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகி அர்ஜூனன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பிரதாபன், ஜீவா, மோகன், கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
பென்னாகரம்
பென்னாகரம் பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சராஜி, தொ.மு.ச. தொழிற்சங்க தலைவர் வெற்றிவேல் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனோன்மணி, மாதன், அன்பு, ரவி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் 4 சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனித சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Next Story