வாலிபரை தாக்கி கொலை செய்ய முயற்சி; 3 பேர் கைது

வாலிபரை தாக்கி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழப்பழுவூர்:
திருச்சி மாவட்டம் வரகுப்பை கிராமத்தை சேர்ந்த கண்ணதாசனின் மகன் ரகுபதி(வயது 23). இவருக்கு அவரது உறவினர்களின் குடும்பத்தினருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் சம்பவத்தன்று அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே மலத்தான்குளம் கிராமத்தின் அருகே உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்று வந்தபோது, 3 பேர் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கீழப்பழுவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்த போலீசார், ரகுபதியை தாக்கிய பூண்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரராஜின் மகன் பூவை சிற்றரசு (23), கண்ணதாசனின் மகன் இளையராஜா (23), சித்திரவேலின் மகன் சக்திவேல் (23) ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story