நாமகிரிப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சியவர் கைது - 1,100 லிட்டர் ஊறல் அழிப்பு

நாமகிரிப்பேட்டை அருகே சாராயம் காய்ச்சியவரை கைது செய்த போலீசார் அங்கிருந்த 1,100 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி செம்மண்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஆயில்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செட்டியண்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது செம்மண்காடு பகுதியில் விவசாயி செல்வராஜ் (வயது 48) என்பவர் சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அங்கிருந்த 1,100 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர்.
Related Tags :
Next Story