சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை- சேலம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்:
சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் பலாத்காரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்னநடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ராமன் (வயது 21), கட்டிட தொழிலாளி. இவருக்கும், அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த 15 வயதுடைய மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை ராமன் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி கடத்தி சென்று விட்டார்.
இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமி மற்றும் ராமனை போலீசார் மீட்டனர். போலீஸ் விசாரணையில் சிறுமியை ராமன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story