தூத்துக்குடியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 14 பேர் மீட்பு


தூத்துக்குடியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 14 பேர் மீட்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 7:49 PM IST (Updated: 12 Aug 2021 7:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 14 பேர் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 14 பேர் மீட்கப்பட்டனர்.
கணக்கெடுப்பு பணி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படியும், முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி ஆலோசனையின் பேரிலும் தூத்துக்குடி நகர்ப்புற வட்டார வளமையத்தின் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நடந்தது. இந்த கணக்கெடுப்பு பணியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார். உதவித் திட்ட அலுவலர் சுப்பிரமணியன், புள்ளியியல் அலுவலர் சுடலை மணி, மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கூடலிங்கம், ராஜசெல்வி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 குழந்தைகள் மீட்பு
கணக்கெடுப்புப் பணியின் போது, ஏற்கனவே படித்து வரும் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விவரங்களை ஆய்வு செய்தனர். அதில் 33 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு எந்த பள்ளிக்கூடத்திலும் சேர்க்கை பெறாமல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த குழந்தைகளின் வீட்டுக்கு அலுவலர்கள் சென்று விசாரித்தனர். தொடர்ந்து 14 குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்த்தனர். மற்ற குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆய்வு பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மெல்ஷியா ஜெபஷீலா, பார்வதி, பால்சாமி, சிறப்பு பயிற்றுனர்கள் ஆப்பிள் ஜெயா, டாரதி, விண்ணரசி, ரீட்டா, இருதயராணி, இயன்முறை மருத்துவர் ஜூடி, பேச்சு பயிற்சி நிபுணர் சிவகாமி, சிறப்பு பயிற்சி மைய தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அமுதா, சிறப்பு பயிற்றுனர் ராஜா சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியை செலின் மேரி ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story