ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தசாமி, பொருளாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
கொரோனா ஊக்கத்தொகை
நகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். பி.எப்., இ.எஸ்.ஐ. முறையாக செலுத்த வேண்டும். தள்ளுவண்டிக்கு பதிலாக பேட்டரி வண்டிகள் வழங்க வேண்டும். அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்பு ஏற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தகுதி வாய்ந்த தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுனர், மேஸ்திரி மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனைத்தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுக்களை நகராட்சி அலுவலகத்தில் அளித்து சென்றனர்.
Related Tags :
Next Story