வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

கோவில்கள் பூட்டப்பட்டதால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்
கோவில்கள் பூட்டப்பட்டதால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்கள்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார். அதன்படி, கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கோவில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடந்தாலும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்த அறிவிப்பு முக்கிய கோவில்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனம்
நேற்று ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். ஆனால் கோவில்களின் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் நேற்று காலை கோவில்களின் வாசலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், முக்கிய அம்மன் கோவில்களில் முன்பும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் தரிசனம் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது. மாவட்டம் முழுவதும் முக்கிய கோவில்களில் நேற்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
-
Related Tags :
Next Story