குடியாத்தம் அருகே; வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த காட்டுயானைகள்


குடியாத்தம் அருகே; வனப்பகுதியில் கூட்டமாக சுற்றித்திரிந்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 14 Aug 2021 9:44 PM IST (Updated: 14 Aug 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே வனப்பகுதியில் 11 காட்டுயானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே வனப்பகுதியில் 11 காட்டுயானைகள் கூட்டமாக சுற்றித்திரிந்தன. அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

11 காட்டுயானைகள்

ஆந்திர எல்லையையொட்டி உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வந்தன. ஓரிரு மாதங்களாக காட்டுயானைகளின் தொல்லை சற்று குறைந்திருந்தது.

எனினும், ஆங்காங்கே ஓரிரு காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. காட்டுயானைகள் நடமாட்டம் குறைந்திருந்ததால் குடியாத்தம் பகுதி விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

இந்தநிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் சுற்றித்திரிந்்த 11 காட்டுயானைகளை கொண்ட கூட்டத்தை ஆந்திர வனத்துைற ஊழியர்கள் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு தமிழகத்தை நோக்கி விரட்டியடித்தனர்.

11 காட்டுயானைகளும் கூட்டமாக இரவு 12 மணியளவில் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே வந்து முகாமிட்டு இருந்தன. இதனால் கிராம மக்கள் இரவு முழுவதும் அச்சத்துடன் தூங்காமல் விழித்திருந்தனா்.

தீவனப்பயிர், வாழை தேசம்

அங்கு, காட்டுயானைகள் பிளிரும் சத்தம் கேட்டு கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு, வனவர் மாசிலாமணி மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று ேநற்று முன்தினம் நள்ளிரவே கிராம மக்களின் உதவியோடு பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் 3 மணிநேரம் போராடி வனப்பகுதிக்குள் காட்டுயானைகளை விரட்டியடித்தனர்.

காட்டுயானைகள் கூட்டம் சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவரின் விளை நிலங்களுக்குள் புகுந்து சென்றதால், அவர் பயிரிட்டு இருந்த தீவனப்பயிர், வாழை மரங்கள் சேதமடைந்தன.

விரட்டும் பணி தீவிரம்

நேற்று மாலை மீண்டும் காட்டுயானைகள் கூட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்கு அருகே வந்து மீண்டும் முகாமிட்டு இருந்தன. கிராம மக்கள் வனத்துறையினருக்கு மீண்டும் தகவல் தெரிவித்தனர். 

மாவட்ட வன அலுவலர் பார்க்கவதேஜா, உதவி வனப்பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுயானைகளை தமிழக வனப் பகுதிக்குள் நுழையாமல் இருக்க கிராம மக்கள் உதவியோடு பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்து வனப்பகுதிக்குள் நுழைந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Next Story