போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல்


போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல்
x
தினத்தந்தி 14 Aug 2021 10:42 PM IST (Updated: 14 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொண்டி, 
தொண்டி அருகே உள்ள தாமோதரன் பட்டினம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் இரு தரப்பினரும் கம்பு, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தாமோ தரன்பட்டினம் சின்னையா மகன் அப்பாஸ் (வயது 22) என்பவர் எஸ்.பி.பட்டிணம் போலீசில் அளித்த புகாரின் பேரில் மணி உள்பட 7 பேர் மீதும் அதே ஊரைச்சேர்ந்த தங்கவேல் மகன் சக்தி அளித்த புகாரின்பேரில் அய்யப்பன்  உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் காயமடைந்த ஸ்ரீராம், கவியரசன், ரவிக்குமார் ஆகியோர் திருவாடானை அரசு மருத்துவ மனையிலும் மற்றொரு தரப்பை சேர்ந்த சக்தி, மணி ஆகிய 2 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் சம்பவத்தையொட்டி பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் விக்னேஷ் குமார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எஸ்.பி.பட்டிணம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சின்னையா மகன் அய்யப்பன் (25) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story