ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
தமிழகத்தில் அதிக ரெயில்கள் வந்து செல்லும் இடங்களில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையமும் ஒன்றாகும். பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது.
இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கியமான கோவில் தலங்கள், மின் அலுவலகங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன், ஏட்டு சுப்பிரமணியன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று அங்குள்ள பிளாட்பாரங்கள், ரெயில் தண்டவாள பாதைகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் ஆகிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளின் உடமைகளையும், ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.
பல்வேறு இடங்களில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story