கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 17 Aug 2021 1:17 AM IST (Updated: 17 Aug 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள முத்தார்பட்டியை சேர்ந்த அழகர்  (வயது 77) என்பவர் ஆட்டுக்குட்டிக்கு குழை பறிக்க காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு உள்ள கிணறு அருகே குழை பறித்துக்கொண்டு இருக்கும் போது தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்துள்ளார். உடனே கிணற்றில் விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவரை தேடினர். பின்னர் இறந்த நிலையில் அவரது உடல் மீட்ெடடுக்கப்பட்டது. போலீசுக்கு தெரியாமல் அழகர் உடல் எரிக்கப்பட்டதாக  முத்தார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் அழகர் மகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story