டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது


டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 18 Aug 2021 12:23 AM IST (Updated: 18 Aug 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நயினார்கோவில் ரோடு பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டிராக்டரை மடக்கி சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த தொருவளுர் ஆறுமுகம் மகன் கலுங்கடியான் (வயது 48) என்பவரை பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.



Next Story