கடன் வாங்கியவர் வீட்டு முன்பு விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
கடன் வாங்கியவர் வீட்டு முன்பு விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல், ஆக.19-
கடன் வாங்கியவர் வீட்டு முன்பு விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரூ.16¼ லட்சம் கடன்
நாமக்கல் மாவட்டம் ஏ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவர் வளையப்பட்டியில் புத்தக கடையும் நடத்தி வருகிறார். இவரிடம் நாமக்கல்லை சேர்ந்த உறவினர்கள் 2 பேர் கடந்த 2017-ம் ஆண்டு கடனாக ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வாங்கி உள்ளனர். அந்த கடன் தொகையில் ரூ.3 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.13 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இதற்கிடையே அவர்கள் தொழிலில் நஷ்டம் அடைந்ததாக மஞ்சள் நோட்டீசு வெளியிட்டனர். எனவே அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், கடன் தொகையை பெற்று தரக்கோரி நேற்று கடன் கொடுத்தவர்களில் ஒருவர் நாமக்கல்லில் வசித்து வரும் வாடகை வீட்டு முன்பு மனைவி சத்யா மற்றும் குழந்தைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் சிவக்குமாரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை நாமக்கல் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story