இந்து கடவுள்களை அவமதித்த வழக்கில் மந்திரி முருகேஷ் நிரானி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல்; போலீசாருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவு

இந்து கடவுள்களை அவமதித்த வழக்கில் மந்திரி முருகேஷ் நிரானி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
முருகேஷ் நிரானி மீது வழக்கு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் தொழில்துறை மந்திரியாக இருந்து வருபவர் முருகேஷ் நிரானி. இவர், கடந்த ஆண்டு (2020) வாட்ஸ்-அப் குரூப்பில் இந்து கடவுள்களை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பி இருந்தது. இதுதொடர்பாக மந்திரி முருகேஷ் நிரானி மீது பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் கோவிந்தராம் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார், மந்திரி முருகேஷ் நிரானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில், இந்து கடவுள்களை அவமதித்த விவகாரத்தில் மந்திரி முருகேஷ் நிரானி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவிந்தராம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விசாரணை நடத்த உத்தரவு
அந்த வழக்கு தொடர்பான விசாரணை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இந்து கடவுள்களை அவமதித்த வழக்கில் முருகேஷ் நிரானி மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கூறி கொடிகேஹள்ளி போலீசாருக்கு, நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த வழக்கில் முருகேஷ் நிரானி மீது உரிய விசாரணை நடத்தி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவும் கொடிகேஹள்ளி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மந்திரி முருகேஷ் நிரானிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை எதிர்கொள்ள தான தயாராக இருப்பதாகவும், போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story