கோஷ்டி மோதலில் 2 வீடுகள் சூறை

கோவில் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 வீடுகள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 55). இவர், அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் பூசாரியாக உள்ளார்.
இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கோவில் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசனின் தோட்டத்துக்கு மணிகண்டன் மற்றும் சிலர் சென்று, பூஜை நடத்தி பில்லி சூனியம் வைத்து கொண்டிருப்பதாக கணேசனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கணேசன் மற்றும் சிலர் சென்று, எங்களது தோட்டத்தில் ஏன் பூஜை நடத்துகிறாய் என்று கேட்டனர்.
அப்போது மணிகண்டன், கணேசன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கினர். இந்த கோஷ்டி மோதலில் 2 வீடுகளின் மேற்கூரை அடித்து நொறுக்கப்பட்டு, பொருட்கள் சூறையாடப்பட்டன.
இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப் இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story