டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு அழகு செடிகள் அனுப்பி வைப்பு

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு அழகு செடிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு சமீபத்தில் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கண்ணாடி மாளிகையில் உள்ள சக்குலன்ட் வகை தாவரங்களை பார்வையிட்டு பிரமித்தார். மலர்கள் இல்லாமல் தாவரங்கள் அழகாக காட்சி அளிப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரியிடம் கேட்டறிந்தார். மேலும் ஜனாதிபதி மாளிகையில் சக்குலன்ட் வகை தாவரங்களை நடவு செய்வதற்காக அதன் நாற்றுகள் கேட்கப்பட்டது.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை மூலம் 5 வகைகளில் இருந்து தலா 5 செடிகள் என்ற வகையில் மொத்தம் 25 செடிகள் பேக்கிங் செய்து, டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,
மலைப்பிரதேசமான ஊட்டியை போல் டெல்லியில் சீதோஷ்ண காலநிலை நிலவுவதால் அழகு செடிகள் நன்றாக வளரும் தன்மை உடையது. கண்ணாடி மாளிகை மட்டும் இல்லாமல் திறந்த வெளியிலும் சக்குலன்ட் செடிகளை நடவு செய்யலாம். அவை தாவரவியல் பூங்காவில் காட்சி அளித்தது போல் ஜனாதிபதி மாளிகையிலும் அழகாக காட்சியளிக்க உள்ளது என்றார்.
Related Tags :
Next Story