காரைக்குடி,
கல்லல் ஊராட்சி ஒன்றியம் கோவிலூரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சுகாதார துணை இயக்குனர் வழிகாட்டுதலில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோவிலூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுந்தரி சுப்பிரமணியன், தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் பொற்கொடி முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆல்வின் ஜேம்ஸ் டாக்டர் கார்த்தீஸ்வரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் அழகப்பன் மற்றும் சுகாதார பிரிவினர் முகாமில் கலந்துகொண்ட 250 பேருக்கு ெகாரோனா தடுப்பூசி செலுத்தினர். மேலும் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.