‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 22 Aug 2021 12:30 AM IST (Updated: 22 Aug 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தோகைமலை,
தோகைமலை கடைவீதி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சாந்திவனம் மனநல காப்பகத்தினர் அந்த பெண்ணை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு சாந்திவனம் மனநல காப்பகத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த பெண் பூரண குணமடைந்தார். அவரிடம் விசாரித்த போது தனது பெயர் பெரியகாலள் என்றும், தெலுங்கு பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணின் மகன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவருடைய மகன்கள் சாந்திவனம் மனநல காப்பகத்திற்கு சென்று தங்களது தாயை அழைத்துச்சென்றனர்.

Next Story