செம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


செம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 23 Aug 2021 12:56 AM IST (Updated: 23 Aug 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

செம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

செம்பட்டி:
திருப்பூரை சேர்ந்த வேலுச்சாமி மகன் கோபால் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் நேற்று, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் வசிக்கும் தனது நண்பர் லட்சுமணன் என்பவரது வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொள்வதற்காக காரில் வந்தார். கோபாலுடன், அவரது நண்பர்கள் சிலரும் வந்தனர். பின்னர் அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, திருப்பூருக்கு காரில் திரும்பினர். 
செம்பட்டியை அடுத்த போடிகாமன்வாடி கண்மாய் அருகே அவர்கள் வந்தபோது, அங்கிருந்த கிணற்றில் குளிக்க முடிவு செய்தனர். அதன்படி காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, கோபாலும், அவரது நண்பர்களும் கிணற்றில் குளித்தனர். அப்போது கோபால் கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன கோபாலுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story