திண்டுக்கல்லில் தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்


திண்டுக்கல்லில் தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Aug 2021 1:00 AM IST (Updated: 23 Aug 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில், 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு தியேட்டர்களை சுத்தப்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர்களில் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள், நடைபாதை, கழிப்பறை என அனைத்தும் நேற்று சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் இருக்கைகள் மீது கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது. அதேபோல் தியேட்டரில் உள்ள பிரமாண்ட திரை, ஒலிப்பெருக்கிகள் மற்றும் பிற உபகரணங்களும் முறையாக செயல்படுகிறதா? என்று சோதனை செய்து பார்க்கப்பட்டது. மேலும் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகளில் தடுப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் தியேட்டர் பணியாளர்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டன. 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 

Next Story