கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்


கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:20 PM IST (Updated: 23 Aug 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கலெக்டர் சமீரன் தொடங்கிவைத்தார்.

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கலெக்டர் சமீரன் தொடங்கிவைத்தார்.

24 மணி நேர தடுப்பூசி முகாம்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையம் அமைக்கப்பட்டது. அந்த மையத்தை கலெக்டர் சமீரன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

கோவை மாவட்டத்தில் தற்போது வரை 20 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 

முன்னுரிமை அடிப்படை 

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேர தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. 

இதைத்தொடர்ந்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர், கோலார்பட்டி, சுண்டக்காமுத்தூர், கிணத்துக்கடவு ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இந்த சிறப்பு மையத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்.

 அதன்பிறகு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் அருணா, அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி குழந்தைவேல், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி பொன்முடிச் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story