நீலகிரியில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 6 அரசு ஆஸ்பத்திரிகளில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
100 சதவீத இலக்கு
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி 100 சதவீத இலக்கை எட்ட முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறவர்கள் கண்டறியப்பட்டு, நேரடியாக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
6 அரசு ஆஸ்பத்திரிகள்
நீலகிரியை சேர்ந்தவர்கள் சிலர் வெளி இடங்களில் வசித்து வருவதால் வீடுகள் மூட்டப்பட்டு உள்ளன. இருப்பினும் கடந்த வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நீலகிரியில் 6 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி
ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பொறுப்பு டாக்டர் அர்ஜூன் (8056316453), குன்னூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் டாக்டர் ராஜ்பிரகாஷ் (9677720300), கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் கிருத்திகா (8903727841),
கூடலூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் நவனீதரன் (9361163725), பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் டாக்டர் அபிநத் (9629179454),
மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் பூவிழி (8072424941) ஆகிய மையங்களில் டாக்டர்களை தொடர்பு கொண்டு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இந்த மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story