வாணியம்பாடி அருகே மாரியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
மாரியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேட்டுபாளையம் ஆபீஸர்லைன் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலைபூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ேள சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த தங்க தாலி மற்றும் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story