உடுமலையில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி ஏழைகளுக்கு இலவசவேட்டி சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலையில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி ஏழைகளுக்கு இலவசவேட்டி சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
உடுமலை,
உடுமலையில் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி ஏழைகளுக்கு இலவசவேட்டி சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
விஜயகாந்த் பிறந்த நாள் விழா
உடுமலையில், தே.மு.தி.க. நிறுவனர் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள்விழா, திருப்பூர் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் ஏழை, எளியவர்கள் 100 பேருக்கு சுமார் ரூ.20ஆயிரம் மதிப்பிலான இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு தே.மு.தி.க.திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஆறுச்சாமி தலைமை தாங்கி, இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். கட்சியின் ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதைத்தொடர்ந்து உடுமலை நகரத்தில் நகர செயலாளர் கே.ராமச்சந்திரன், அவைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் 10 இடங்களில் கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மத்திய பஸ் நிலையம் முன்பு நடந்த விழாவில் ஏழைகளுக்கு அசைவ உணவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.ஆறுச்சாமி வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாக்களில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் வக்கீல் கே. பன்னீர்செல்வம், மாவட்ட துணைச்செயலாளர் ஏ.அண்ணாத்துரை, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எஸ்.என்.துரைக்கண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாகருணாகரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் பர்வதம் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.கணேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர் வி.சிங்காரவேலன், மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் சாந்துபாய், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ்பாபு, குணசேகரன், மாவட்ட தொண்டரணி செயலாளர் மாதேஸ்வரன், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story