திருட்டு லாரி மீட்பு; 2 பேர் கைது


திருட்டு லாரி மீட்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2021 11:45 PM IST (Updated: 27 Aug 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருட்டு லாரி மீட்பு; 2 பேர் கைது

சிவகங்கை
சிவகங்கை பகவத்சிங் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தன்னுடைய லாரியை சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தியிருந்தார். அவர் மீண்டும் அங்கு வந்தபோது லாரியை சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் லாரியை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையை சேர்ந்த சிலர் லாரியை திருடிச் சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன்சுவாமி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார்(31) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். திருடுபோன லாரியை மீட்டனர்.

Next Story