மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்

விளாத்திகுளம் அருகே மணல் திருடி ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர், டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே, மணல் திருடி ஏற்றிச்சென்ற டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டர் உரிமையாளர், டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டிராக்டர் பறிமுதல்
விளாத்திகுளம் அருகே சூரங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூரங்குடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மாநகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு டிராக்டரை சோதனை செய்தனர். அதில் மணல் திருடி கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர். அப்போது டிராக்டர் டிரைவர் தப்பியோட முயற்சிக்கவே போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கன்னிராஜபுரத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 57) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
உரிமையாளர் கைது
அப்போது காரில் வந்த டிராக்டர் உரிமையாளர் சிந்தாமணிநகரைச் சேர்ந்த முத்தழகு (59), மற்றும் காரை ஓட்டி வந்த முனிஸ்வரன் (38) ஆகியோர் போலீசாரை வழிமறித்து, டிராக்டரை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து முத்தழகு மற்றும் முனிஸ்வரனை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story