குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 31 Aug 2021 3:41 PM GMT (Updated: 2021-08-31T21:11:38+05:30)

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தாராபுரம், 
தாராபுரத்தை அடுத்துள்ள தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பாளையம், சகுனிபாளையம், ரங்கபாளையம், வெங்கிட்டி பாளையம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான குடிநீர் குழாய் தாராபுரம் வழியாக செல்கிறது. இந்த நிலையில் தாராபுரம் பைபாஸ் ரோடு பூளவாடி பிரிவு அருகே உள்ள பாலத்தின் அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சென்றது.பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்பட்டு இருப்பதால் அதனை சிறுவர்கள் உடைத்து விடுகின்றனர். இதுபோன்று மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயும் பலமுறை உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதோடு, அமராவதி ஆற்றில் இருந்து குடிநீர் திட்டப்பணி முடிவடையும் எல்லை வரை இரும்பு குழாய் பதிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story