கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதாக பால் உற்பத்தியாளர்கள் திடீர் போராட்டம்


கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதாக பால் உற்பத்தியாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2021 8:55 PM GMT (Updated: 31 Aug 2021 8:55 PM GMT)

கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதாக பால் உற்பத்தியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கி வந்த அந்த சங்கம், தற்போது நஷ்டத்தில் இயங்குவதாகவும், இதற்கு சங்க நிர்வாகத்தில் நடந்து வரும் முறைகேடே காரணம் என்று கூறியும், அலுவலக உபகரணங்கள், மின்சாதன பொருட்கள், கொள்முதல் செய்யும் பாலை சேகரித்து வைக்கும் கேன் மூடி, சுகாதார பொருட்கள் வாங்கியதில் மிக அதிகமான தொகைக்கு கணக்கு எழுதி முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கறவையாளர்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை ஊற்றாமல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆவின் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பால் உற்பத்தியாளர்களிடம் பேசியபோது, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, தாங்கள் கறந்து கொண்டு வந்த பாலை சங்கத்தில் கொடுத்து சென்றனர்.

Next Story