திருச்சி மாவட்டத்தில் 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திருச்சி, செப்.1-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 69 பேர் நேற்று குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் நேற்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகினார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 550 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை திருச்சி மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74 ஆயிரத்து 354 ஆக உள்ளது.

Related Tags :
Next Story